முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக
பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின்
செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா உடல் நலத்துடன்
உள்ளார். அவருக்கு அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது, வழக்கமான உணவுகளை
அருந்தி வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரண்டு முறை அறிக்கை
வெளியிட்டது.
மூன்றாவது நாளான இன்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை மீண்டும்
அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் என்று வீடு திரும்புவார் என்று தகவல்
தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அவர் மேல் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக
தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் அதிமுக தொண்டர்களை
கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அதிமுக செய்தி
தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக
சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப
வேண்டாம். அம்மா மிகவும் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார். தொண்டர்கள்
கவலை அடைய வேண்டாம், அம்மா விரைவில் வீடு திரும்புவார் என்றும் சி.ஆர்.
சரஸ்வதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment