விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பர்மர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் பர்மர் அருகே உள்ள உத்தர்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக இந்த விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியது.
உடனே விமானிகள் பாராசூட் மூலம் உயிர் தப்பினர். அந்த விமானம் பர்மர் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்தது. விமானம் விபத்துக்குள்ளானது பற்றி விசாரணை நடத்த விமானப்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராஜஸ்தான் உத்தர்லாய், குஜராத்தின் ஜாம்நகர் பகுதிகளில் மிக் 21 ரக போர்விமானங்கள் விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 30க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment