Latest News

குண்டா இருக்கவங்களும் நிர்வாணமா வரலாம்... விதியை தளர்த்திய ஜப்பான் ஹோட்டல்

ஜப்பானின் முதல் நிர்வாண ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கான அனுமதி 

விதிகளை தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் குறிப்பிட்ட வயது மற்றும் எடை அளவின் கீழ் விதிகளை வகுத்திருந்தனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவவே தற்போது விதிகளை தளர்த்தி அறிவித்துள்ளது. லண்டன், ஆஸ்திரேலியாவில் நிர்வாண உணவகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் முதல் நிர்வாண உணவகம் கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது. இந்த உணவகத்துக்கு "தி அம்ரிதா" என்று பெயரிட்டுள்ளனர். அம்ரிதா என்றால் சமஸ்கிருத வார்த்தைக்கு அமரத்துவம் என்று பொருள். இந்த ஹோட்டலில் திடகாத்திரமான ஆண்கள் சிறிய வகை உள்ளாடைகள் அணிந்து உணவு பரிமாற பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆண் மாடல்களின் நடன நிகழ்ச்சியும் இங்கு அரங்கேறுமாம்.

ஆதி காலத்தில் ஆடைகள் இன்றி இருந்த ஆதாம் - ஏவாளை நினைவுபடுத்தும் வகையில் இது போன்ற ஹோட்டல்களை தற்போது திறந்து வருகின்றனர். இந்த உணவகத்துக்கு சாப்பிட வருபவர்களுக்கு சில விதிமுறைகளை அந்த உணவு நிர்வாகம் விதித்தது. அதில், 18 முதல் 61 வயது வரை உள்ள நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. உடலில் டாட்டூ போட்டிருக்க கூடாது. தனது உயரத்துக்கு ஏற்ற சராசரி எடையை கொண்டிருக்க வேண்டும். சராசரி எடையை விட 15 கிலோ கூடுதலாக எடை கொண்டுள்ள நபர்களுக்கு அனுமதி கிடையாது. உடலில் டாட்டூ போட்டிருக்க கூடாது. தனது உயரத்துக்கு ஏற்ற சராசரி எடையை கொண்டிருக்க வேண்டும். சராசரி எடையை விட 15 கிலோ கூடுதலாக எடை கொண்டுள்ள நபர்களுக்கு அனுமதி கிடையாது. இங்கு வருபவர்கள் உணவகம் வழங்கும் சிறிய பேப்பர் உள்ளாடையை அணிந்து கொள்ளலாம். செல்போன்கள், கேமிரா உள்ளிட்டவற்றை லாக்கரில் வைத்து பூட்டி விட வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்ற விதிமுறைகளும் விதிக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவவே தற்போது விதிகளை தளர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி 20 வயது முதல் 120 வயது வரை உள்ளவர்கள் இந்த ஹோட்டலுக்கு செல்லலாம். தற்போது உயரத்திற்கு ஏற்ற எடையைவிட 15 கிலோ அதிகமானவர்கள் வரை அனுமதிக்கப்படுவர். ஆனால் டேட்டூ வரைந்துள்ளவர்களுக்கு அனுமதி கிடையவே கிடையாதாம். இங்கு உணவருந்த முன்பதிவு கட்டணமாக தலை ஒன்றுக்கு 750 ​அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உணவு விலைகள் மெனு வகைகளை பொறுத்து 130 முதல் 261 ​அமெரிக்க டாலர்கள் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தளர்த்தப்பட்ட பின்னர் ஓவர் வெயிட் ஆட்களும் நிர்வாணமாக சாப்பிட ஹோட்டலுக்கு படையெடுத்து வருகின்றனராம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.