திமுக ராஜ்யசபா எம்.பி. சிவாவை டெல்லி விமான நிலையத்தில் தாக்கியதால் அதிமுக மேலிடம் தம்முடைய கட்சி எம்பி சசிகலா புஷ்பாவை 'தண்டித்தே' விட்டது. ஆனால் அடிவாங்கிய திருச்சி சிவா தரப்போ திமுகவோ இதுவரை சசிகலா புஷ்பா மீது போலீசில் எந்த புகாருமே தெரிவிக்கவில்லை. டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாகத் தாக்கினார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா. இதைத் தொடர்ந்து அதிமுக மேலிடம் விசாரணை நடத்தி சசிகலா புஷ்பாவுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தது. தனது கட்சிக்காரர் பொது இடத்தில் அசிங்கமாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக அவரை அழைத்து விசாரித்து கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது. பின்னர் தம்மை ராஜினாமா செய்ய சொல்லி முதல்வர் ஜெயலலிதா அடித்தார் என ராஜ்யசபாவில் புகார் கூறினார் சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்தே டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அதிமுகவில் களேபரம் இப்படி மாற்று கட்சியை சேர்ந்த எம்பியை அடித்தார் என்பதற்காக அதிமுகவில் பெரும் களேபரமே வெடித்திருக்கிறது. ஆனால் அடிவாங்கிய திருச்சி சிவாவோ, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசிவிட்டு, அமைதியாக இருக்குமாறு கூறினார் என தெரிவித்திருந்தார்.
சசிகலா மன்னிப்பை ஏற்ற சிவா? அதை விட முக்கியமாக சசிகலா புஷ்பா கேட்ட மன்னிப்பை திருச்சி சிவா ஏற்றுக் கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியாகியுள்ளன. புஷ்பா நீக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் திருச்சி சிவாவிடமிருந்து எந்த சத்தத்தையும் காணோம்.
கனிமொழி பகிரங்க ஆதரவு இதற்கும் மேலாக ராஜ்யசபாவில் இந்த பிரச்சனையை சசிகலா புஷ்பா பேசியபோது, திமுக எம்பி கனிமொழி பகிரங்கமாக அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.அடிவாங்கிய திருச்சி சிவாவின் கட்சியை சேர்ந்த எம்பி கனிமொழியே அடித்த சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது வினோதமாகத்தான் இருந்தது.
ஒரு புகாரும் தரலையே... இத்தனைக்கும் மேலாக இதுவரை திமுக தரப்பு, தமது கட்சி எம்பியை அடித்த சசிகலா புஷ்பா மீது போலீசில் எந்த ஒரு புகாரும் கொடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.
கனிமொழி "மேடம்" அதை விட முக்கியமாக சசிகலா புஷ்பா திமுக தரப்புடன் நெருக்கம் காட்டுகிறார். கனிமொழி மேடம் என்றுதான் அவர் கூறுகிறார். சிவாவை அடித்ததும் கனிமொழியிடம் அவர் பேசியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment