சென்னை பாரிமுனையில் வழக்கறிஞர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பினர். திட்டமிட்டபடி உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக சென்ற வழக்கறிஞர்களை பாரிமுனை பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வக்கீல்கள் அறிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 126 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து அகில இந்திய பார்கவுன்சில் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டப்படி இன்று வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.
ஹைகோர்ட் வளாகத்தின் பதற்றம் வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போட்ப்பட்டுள்ளது. 350 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முற்றுகை போராட்டம் திட்டமிட்டப்படி உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தலைமை நீதிபதியும், பார்கவுன்சில் தலைவரும் வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
போலீஸ் தயார் நிலை பாரிமுனை பகுதிகளில் வழக்கறிஞர்களின் பேரணியாக சென்றனர். அப்போது நீதிபதிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. வழக்கறிஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக உயர்நீதிமன்றத்தின் 4 வாயில்களிலும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களுடன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதால் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புடன், பதற்றமும் நிலவுகிறது. வழக்கறிஞர்கள் போராட்டத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தை முன்னிட்டுஉயர்நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 350 மத்திய படை வீரர்கள் மற்றும் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:
Post a Comment