சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளி என்று போலீஸ் கூறி வரும் நிலையில், சுவாதி கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு செய்தியை கூறியுள்ளார். சுவாதி கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்டது. கடந்த மாதம் இதே நாளில் தமிழகமே, ஏன் இந்திய ஊடகமே சுவாதி கொலையைப் பற்றிதான் பேசியது. ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சுவாதி கொலை 15 நாட்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ராம்குமார் மட்டும் குற்றவாளி இல்லை என்ற தகவல் பரவவே மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். ஆகஸ்ட் 1 வரை ராம்குமாரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடவே மீண்டும் புழலில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். கபாலி ரிலீஸ் பற்றிய காய்ச்சலில் சுவாதியையும், ராம்குமாரையும் மக்கள் மறந்தே போனார்கள். இந்த வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவல்கள் வெளிவருகின்றன. ராம்குமாருக்காக வாதாட வழக்கறிஞர் குழு ஒன்று உள்ளது. இவர்கள் தினமும் புதுப்புது தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
சுவாதியை கொன்றது 2 பேர் ராம்குமாருக்கு ஆதரவாக உள்ள ஒரு வழக்கறிஞர் அளித்த பேட்டி ஒன்றில் சுவாதியை இரண்டு பேர் சேர்ந்து கொன்றதாக திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அவரது கொலை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. இப்போது வழக்கறிஞரின் பேட்டியில், தனக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருந்து ஒருவர் போன் செய்ததாகவும் அவர் சுவாதி கொலையை நேரில் பார்த்ததாக கூறியதாக தெரிவித்தார்.
ஒருவர் பிடிக்க மற்றவர் வெட்டினார் கடந்த 24ம் தேதி சுவாதி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது வந்த ஒருவர் சுவாதியின் தலைமுடியை பிடித்து அவரை நிமிர்த்து பிடித்ததாகவும், மற்றொருவர் சுவாதியை வெட்டியதாகவும் கூறியதாக புது கதை ஒன்றை கூறுகிறார் அந்த வழக்கறிஞர்.
மீண்டும் விசாரணைக்கு மனு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நடித்துக் காட்ட வைத்து வீடியோப் பதிவு எடுக்க போலீஸார் முயற்சி செய்தனர். அப்போதைக்கு முடியாததால், தற்போது மீண்டும் ஒருநாள் விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் போலீஸார். போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ராம்குமாரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
திசை திருப்ப முயற்சி சுவாதி படுகொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை முற்றிலும் அழித்துவிட்டு, புதிய வீடியோப் பதிவின் மூலம் குற்றவாளி இவர்தான் என உறுதிப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டனர். இந்த அக்கறையை வேறு ஏதாவது வழக்கில் இவர்கள்
காட்டியிருக்கிறார்களா? மறு விசாரணை என்ற பெயரில் உண்மைக் குற்றவாளிகளை திசைதிருப்பிவிடும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
பிலால் சித்திக் வாக்குமூலம் அதே நேரத்தில் சுவாதியின் கொலை வழக்கில் சுவாதியின் தந்தை வாக்குமூலத்தையோ, பிலால் சித்திக் வாக்குமூலத்தையோ வெளியிலேயே சொல்லவில்லை. ஆனால், ராம்குமாரின் வாக்குமூலம் என சில தகவல்களை கசிய விடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார் எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்.
அரசு நிர்வாகம் அவசரம் விசாரணை சரியான கோணத்தில் செல்லவில்லை என்று கூறும் கதிர், இந்த வழக்கில் அரசு நிர்வாகங்கள் காட்டிய அவசரத்தைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 5,447 பெண்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிராமப்புற பெண்கள் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்று யாருக்காவது தெரியுமா? படுகொலை செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் கிராமப்புறப் பெண்கள் என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இவர்களைப் பற்றி யாராவது அக்கறை எடுத்துக் கொண்டார்களா என்றும் கதிர் கேட்டுள்ளார்.
முதல்வர் உறுதிப்படுத்துவாரா? சுவாதி படுகொலை வழக்கில் ஒருவர் பிடிபட்டவுடன், தனிப்படை போலீஸாருக்கு முதல்வர் பாராட்டு தெரிவிக்கிறார். அதேபோல், கடந்த பத்தாண்டுகளில் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாயிரம் பெண்களின் வழக்குகளையும் விரைந்து நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்வதை முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார் எவிடென்ஸ் கதிர்.
ராம்குமார்தான் குற்றவாளி சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிறது போலீஸ் தரப்பு. நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்திற்குள் தேவைப்படும் அளவுக்கு ஆதாரங்களைத் திரட்டிவிட்டோம். இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவேதான், மீண்டும் காவல் விசாரணைக்கு அனுமதி கோருகிறோம் என்றும் கூறியுள்ளனர். உண்மை எப்போது வெளியே வருமோ?
No comments:
Post a Comment