உடுமலைப்பேட்டையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு ஓய்வூதியம் வழங்கவும், சங்கரின் தந்தைக்கு சத்துணவுக் கூடத்தில் வேலை ஒதுக்கீடு வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ' தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது' என்கிறார் கவுசல்யா.
உடுமலைப் பேட்டை நகரத்தில், கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி, பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் தலித் இளைஞர் சங்கர். பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகளான கவுசல்யாவை காதலித்துத் திருமணம் செய்ததைப் பிடிக்காமல், சின்னச்சாமியின் குடும்பத்தார் சங்கரை சாதி ஆணவப் படுகொலையைச் செய்தனர். இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான கவுசல்யாவும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதன்பின்னர், உடுமலைப்பேட்டையில் உள்ள சங்கரின் குடும்பத்தாருடன் தங்கியிருந்தவர், ஓரிருமுறை தற்கொலை முயற்சிலும் ஈடுபட்டார். ' சங்கரின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்' என வேதனைப்பட்டனர் சமூக ஆர்வலர்கள். அதன்பின்னர், மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் பாதுகாப்பில் முழுமையான மனநல கவுன்சிலிங் பெற்று வருகிறார் கவுசல்யா.
இந்நிலையில், நேற்று கவுசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதுதவிர, சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு சத்துணவுத் துறையில் வேலை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளது.
அரசின் உத்தரவு குறித்து நம்மிடம் பேசிய கவுசல்யா, " சங்கர் அப்பாவுக்கு அரசு வேலையும், எனக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உத்தரவைப் பெறுவதற்கு எவிடென்ஸ் அமைப்பினர் கடுமையாகப் போராடினர். அவர்களால்தான் எனக்கு ஓய்வூதியமும் சங்கர் அப்பாவுக்கு அரசு வேலையும் கிடைத்திருக்கிறது. இதேபோல், கொலை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். என்னைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கினால் நன்றாக இருக்கும். இங்கு எனக்குக் கொடுக்கப்பட்ட மனநல சிகிச்சையால் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளேன். எதையும் துணிச்சலாக எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இன்னும் மூன்று நாட்களில் உடுமலைப்பேட்டைக்குச் செல்ல இருக்கிறேன்" என்றார் அமைதியாக.
இதையடுத்து, நம்மிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், " அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுசல்யாவைப் போன்றே பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டப்படி, பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு மாதம் 4500 ரூபாய் பென்சன் வழங்க வேண்டும் அல்லது அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. கவுசல்யாவுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம். இந்த வழக்கில் முழுமையான நீதி என்பது சங்கரின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்போதுதான் கிடைக்கும்.
சங்கர் படுகொலை வழக்கை, அரசு வழக்கறிஞர் எடுத்து நடத்துவதற்கு பதிலாக, தனியாக சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் கவுசல்யா. அந்த மனு கிடப்பில் இருக்கிறது. அதன்படி வழக்கு நடந்தால் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கும். படுகொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருப்பது ஆறுதல் அளித்தாலும், அவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வரும் நாட்களில் கவுசல்யா படிப்பை நிறைவு செய்த பிறகு, நல்ல அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரது மனதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான பணிகளில் அரசு ஈடுபட வேண்டும்" என வேண்டுகோள் வைத்தார்.
புதிய உத்வேகத்துடன் உடுமலைப்பேட்டையில் உள்ள சங்கர் வீட்டிற்கு வர இருக்கிறார் கவுசல்யா. ' மனதைத் தேற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளும் அரசின் உத்தரவுகளும் அவரது மனதில் புதிய வெளிச்சக் கீற்றை உருவாக்கியிருக்கிறது' என்கின்றனர் எவிடென்ஸ் அமைப்பினர்.

No comments:
Post a Comment