இன்போசிஸ் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 2 பேரை ஒட்டன்சத்திரத்தில் போலீசார் சேஸிங் செய்து மடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதனிடையே சுவாதியின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் சந்தேக நபர்களைத் தேடி தனிப்படை போலீசர் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம்
ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளில் (டி.என்.37 பதிவு எண்) ஹெல்மெட் அணிந்து நேற்று பிற்பகல் 2 பேர் சென்றனர். அப்போது அவர்களை சாதாரண உடையில் இருந்த 2 நபர்கள் சேஸிங் செய்து மடக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். ஆனால் அந்த நபர்கள் ஜீப்பில் ஏற மறுத்து வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களும் பெரும் கூட்டமாக அங்கு
No comments:
Post a Comment