Latest News

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது !


ஜப்பானில் குமமோட்டோ - ஷி என்ற பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியூசூ தீவுப் பகுதியில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நில நடுக்கத்தால், சில கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 19 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 35 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். என்று பேரிடர் மேலாண்மை மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த நிலநடுக்கம் குமமோட்டா - ஷி பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட் சேதம், உயிர் சேத பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.