செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த அறிக்கையை 1 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை சதித்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, ஜல்லிக்கட்டு தொடர்பாக பாஜக கடந்த 18 மாதங்களாகப் பேசாதது ஏன் என்றும், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அதேபோல, அதிமுகவின் 37 எம்பிக்களும் ஜல்லிக்கட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய குஷ்பு, சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறுவது கண்துடைப்பே என்றும் விமரிசனம் செய்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தியுள்ள அவர், அதிமுக தலைமை செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த அறிக்கையை 1 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment