வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி திரட்ட முடியாது. ஆனால் அவற்றுடன் இணைந்த அறக்கட்டளைகள், வெளிநாடுகளில் இருந்து தேர்தல் நிதி பெற்று, பின்னர் அந்த நிதியை அரசியல் கட்சிக்கு மாற்றுவது நடைமுறையில் உள்ளது. இதற்கு சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லை.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து அறக்கட்டளைகள் தேர்தல் நிதி திரட்டுவதற்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.
இதை மத்திய சட்ட அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தேர்தல் கமிஷனின் சிபாரிசை ஏற்று மத்திய அரசு சட்டம் இயற்றி விட்டால், அரசியல் கட்சிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மறைமுகமாக தேர்தல் நிதி வரும் வாய்ப்பும் பறிபோய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment