ஜெட்டாவில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 312 பயணிகளுடன் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. நேற்று இரவு சென்னை வான் எல்லையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது இந்தோனேசியாவை சேர்ந்த மிசிம்கரித்தம் (வயது 70) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இது பற்றி அறிந்த விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிக்க கோரினார். இதையடுத்து விமானம் சென்னையில் தரையிறக்க அனுமதிக் கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவ குழுவினர் அந்த பெண்ணை பரிசோதனை செய்தனர்.
இதனிடையே விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் மிசிம்கரித்தம் மற்றும் 2 உறவினர்களுக்கு அவசரகால மருத்துவ விசா வழங்கி விமானத்தில் இருந்து அவர்கள் இறங்க அனுமதித்தனர். உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் இரவு 9 மணிக்கு அந்த விமானம் 309 பயணிகளுடன் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்றது.


No comments:
Post a Comment