அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோதரர்களே,
சமூகத்தின் அனைத்து விதமான முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதரம். பிற விசயங்களுக்குக் கொடுக்கும் கவனத்தைப் போன்றே தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான விசயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வியாபாரத்தில் பரக்கத் உள்ளதாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். காலை இன்ன நேரம் முதல் மாலை இன்ன நேரம் வரை படிப்பு என்ற நவீனக் கல்வித்திட்டத்தில் உருவாக்கப்படுவோர், அதனை அப்படியே அடியொற்றி கல்விக்குப் பின்னரான வேலை சமயத்திலும் அதே முறையில் நாள் முழுக்க பிறரின் கீழ் ஊதியம் பெற்று வேலை செய்பவர்களாக மாறுவதிலேயே கவனம் வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
சமூகத்தை இந்த அடிமைத்தள சிந்தனையிலிருந்தும் மாற்றி எடுப்பதற்கான ஆலோசனைகளையும் திட்டங்களையும் மேற்கொள்வது அடிப்படை தேவைகளில் ஒன்றாக இன்று மாறிவிட்டது.
இதனைக் கருத்தில்கொண்டே, நமக்கான கல்வித்திட்டத்தைக் குறித்து சிந்தித்து சகோ. சி எம் என் சலீம் போன்றோர் செயலாற்றி வருகின்றனர். அதே போன்று பொருளாதாரம் ஈட்டுவதில் வியாபாரத்தினைச் சரியான ரீதியில் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.
இக்காலக் கட்டத்தில் தனிநபர் சிறு தொழில்கள் என்பது, சர்வதேச மயமாக்கத்தின் ஆக்டோபஸ் கரத்தில் சிக்கி கார்ப்பரேட்டுகளால் அழித்தொழிக்கப்பட்டு வருவது கண்கூடு. இதில் தாக்குப்பிடித்து நிற்கமுடியாமல், பரம்பரை பரம்பரையாக தொழில் செய்து வந்தவர்கள்கூட அவற்றைக் கைவிட்டு கார்ப்பரேட்டுகளிடம் கூலிக்கு வேலை செய்பவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதே நிலை தொடர்வது சமூகத்தின் உயர்வுக்கு நிச்சயமாக எவ்வகையிலும் பயனளிக்கப்போவதில்லை. மாறாக, ஒட்டுமொத்தமாக அடிமைகளாக மாற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.
இந்நிலையினை மாற்ற கார்ப்பரேட்டுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நம்மிடமிருந்து தெளிவான திட்டங்களுடனான தொழில் முனைப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது குறித்து சகோதரர் சி எம் என் சலீம் கூறும்போது, "தனித்து நின்று தொழில் தொடங்குவது இக்காலத்தில் அழிவுக்கே வழி வகுக்கும். சிறு தொழில்கள் என்ற சிந்தனைகளைக் கைவிட்டு கூட்டாகச் சேர்த்து பெருவியாபாரம் செய்ய வேண்டும்" என்பார்.
மிகச் சரியான தீர்வு அது.
ஆம். இன்று நம் சமூகத்தின் எல்லா விதமான சீரழிவிற்கும் அடிப்படையானது நம்மிடையிலான கூட்டு முயற்சி இல்லாமைதான். ஒருவருக்கொருவர் நம்பிக்கை என்பது, மார்க்கத்தின் அடிப்படையான ஈமான், சகோதரர்களிடையே உருவாகி வலுப்பட்டிருக்க வேண்டிய ஈமான் இன்று ஒன்றும் இல்லாமல் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்துகொள்ளாமல், நாம் ஈமானில் உறுதியுடன் தான் இருக்கிறோம் என நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.
நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் பரஸ்பரம் நம்பிக்கை என்பது அவர்களின் வலுவுக்கான அடிப்படை உரமாக்கப்பட்டிருந்தது. அந்தப் பரஸ்பர நம்பிக்கை இன்று நம்மிடையே ஊசி முனை அளவுகூட இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
பணம், கல்வி, அந்தஸ்து, இயக்கம்.. இன்னபிற பல்வேறு காரணிகள் இன்று நம்மிடையே பரஸ்பர நம்பிக்கையின்மை உருவாக்கியுள்ளது. இவற்றுக்கெல்லாம் அடிமையாகா சமூகமே பிற சமூகத்தை ஆளும்.
பொருளாதார விசயத்தைப் பொறுத்தவரை, நாம் நினைத்தால் நம்மிடையே பரஸ்பர நம்பிக்கை தெளிவாக உருவாக்கப்பட்டால் அது ஒரு விசயமே இல்லாமல் ஆகும். நம்மிடம் இருக்கும் சக்திகள் ஒன்றுதிரட்டப்பட வேண்டும்.
* பரஸ்பர நம்பிக்கையின்றி தனித்து நின்று முதலீடுகள் செய்யப்படுகின்றன - தொழில் குறித்த அறிவின்றி
* தொழில் குறித்த தெளிவான அறிவுள்ளவர்கள், முதலீடுகள் செய்ய வழி இல்லாததால் நொடிந்து கூலிகளாக ஆகிவிடுகின்றனர்.
* இறையச்சமற்ற ஏமாற்றுப் பேர்வழிகள் மேற்கண்ட இரண்டு வகையினரையும் எல்லா வகையிலும் ஏமாற்றி அவர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனர்.
இவர்களால் எதிர்மறை அனுபவம் பெற்றவர்கள் கூட்டுத்தொழிலா, வேண்டவே வேண்டாமென ஓடி ஒளிகின்றனர்.
நாம் நினைத்தால்,
* முதலீடு செய்ய சக்தி பெற்றோர்
* தொழில் முனைவர்கள்
* உழைப்பாளிகள்
இவர்களில் இறையச்சமுடையோர்களைக் கண்டறிந்து ஒன்றிணைக்க முடிந்தால், பெரிய அளவிலான தொழில்கள் மிக இலகுவாக ஆரம்பிக்க இயலும்.
பேச இலகுவானதாக இருந்தாலும் செயல்பாட்டுக்குக் கொஞ்சம் கடினமானதுதான். ஆனால் முயற்சி செய்தால், இஃலாஸுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.
நாம் ஏன் இத்தகையதொரு முயற்சியில் இறங்கக்கூடாது?
எடுத்த எடுப்பிலேயே ஒரு தொழிலைப் போய் ஆரம்பிக்க வேண்டிய தேவையில்லை.
முதலில் இந்த விசயத்தில் ஒத்த சிந்தனையுடையவர்களைக் கண்டறிந்து ஒரு குழுவாக இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அக்குழுவில் கள நிலவரம், தொழில்கள், முதலீடுகள் ஆகியவைக் குறித்து ஆலோசிப்போம். தொழில் திட்டங்கள் தீட்டுவோம். தொழில் நடத்துவதற்குத் தகுதியுடைய தொழில் முனைவர்களும் முதலீடு செய்ய தயாராகுபவர்களையும் கொண்டு, உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முனையலாம்.
இந்த அடிப்படையில், முதலீட்டாளர், தொழில் முனைவர், தொழில் ஆலோசகர்கள் மற்றும் உழைப்பாளிகள் அடங்கிய "தொழில் முன்னேற்றக் குழு" ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெயர்:
கல்வி:
தொடர்பெண்:
வாட்ஸ் அப் எண்:
ஃபேஸ்புக்/ஸ்கைப்/மெயில் ஐடி:
வேலை/தொழில்:
தற்போதைய முகவரி:
நிரந்தர முகவரி:
பங்களிப்பு: முதலீட்டாளர்/தொழில் ஆலோசகர்/தொழில் முனைவர்/பணியாளர்
தொழில் முனைவர் எனில்,
துறை:
அனுபவம்:
தனிமனித முன்னேற்றமே சமூக முன்னேற்றம். வாருங்கள், இணைந்து முன்னேறுவோம்.
- தொழில் முனைவோர் குழு
--
Read Quran with meaning!
--
--
ஃபேஸ்புக்கில் இணைந்து கொள்ள: www.facebook.com/TMuslimBrothers
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
--
ஃபேஸ்புக்கில் இணைந்து கொள்ள: www.facebook.com/TMuslimBrothers
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
No comments:
Post a Comment