இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையலகத்தில் வசித்து வந்தார் 92 வயதாகும் பரதன். கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி காலை 8 மணியளவில் பரதன் சுயநினைவிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலளர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பரதன். 1957ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர். 1990களில் இ. கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச்செயலரான பின்னர் தேசிய அரசியலில் தீவிர பங்காற்றினர். 1996ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பரதன். முதுமையினால் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில் டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் வசித்து வந்தார் பரதன் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment