அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் சென்னையில் இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லாஹ்வைச் சந்தித்துப் பேசினார். சென்னையில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைமயகத்திற்கு சென்றிருந்தார் அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார். அங்கு அவர் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவஹிருல்லாஹ்வைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் ஹைதர் அலி, மமக பொது செயலாளர் அப்துல் சமத், தலைமை நிலைய செயலார் ஹுசைன் கனி ,புழல் ஷேக் முஹம்மத், துறைமுகம் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment