நெல்லை அருகே தனியார் பஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை-நாகர்கோயில் ஹைவேயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிகாலை சென்ற யுனிவர்சல் நிறுவனத்தின் தனியர் மல்டி ஆக்சில் சொகுசு பஸ், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அடுத்த பனகுடி அருகில் பிளாக்கோட்டை, சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்தது.
இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த 10 பேர் பலியாயினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நெல்லை ஹைகிரவுண்ட் மற்றும் நாகர்கோயில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 2 பேர் சிறு குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் கருணாகரன், நெல்லை சரக டிஐஜி அன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபக்கம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. டயரும் வெடித்துள்ளது. அதேநேரம் வலது பக்கம் கண்ணாடிகள் உடையவில்லை. இடதுபக்கமாக பஸ் இடித்ததுதான் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த பஸ் சுற்றுலா பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டதா, அதில் பயணித்தோர் பெயர் விவரங்கள் போன்றவை, காயமடைந்துள்ள பயணிகளுக்கு நினைவு திரும்பிய பிறகுதான் தெரியவரும்.
இந்த சம்பவத்தால், நெல்லை-நாகர்கோயில் நடுவேயான 4வழி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment