நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டி நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றத்திற்கு வந்த சோனியாகாந்தியிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டது.
நான் இந்திரா காந்தி மருமகள். எதற்கும் அஞ்சவில்லை. நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதானா என்ற பிரச்சனையை ஊடகங்களிடமும், நீதிமன்றத்திடமும் விட்டுவிடுகிறேன் என்று சோனியா காந்தி கூறினார்.
இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று (செவ்வாய்) எதிரொலித்தது. சோனியா, ராகுல் மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலங்களவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment