நிர்வாகிகள் ஆட்சியில் உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் உடனடியாக முயற்ச்சி செய்து பிலால் நகர் பகுதியை மக்களை பாதுகாக்கவும்.
யோசனையில் தெரிவித்திருப்பதாவது:
'நேற்று (09.12.2015) அதிரை செடியன் குளம் வடிகாலை பார்வையிட்ட மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நான் உங்கள் எல்லாருக்கும் சொல்ல விரும்புவது. பிலால் நகருக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்க உதவும் ஒரு யோசனை. வடிகால் அமைப்பு 21 கன அடி தண்ணீர் வெளியாகும் முறையில் கட்டப்பட்டது. ( மதகு முழுவதும் தண்ணீர் வந்தால் மட்டுமே) தற்போது வெளியாகும் அளவு குறைவு. எனவே தண்ணீர் குளத்தை விட்டு வெளியே வந்த உடன் ஓடுவதற்கு கீழே மதகு உள்ளது ( கவுன்சிலர் லத்தீப் முயற்சியால் கட்டப்பட்டது ) அந்த தண்ணீர் ஓடுவதற்க்கு உள்ள ஒரேவழி இன்று காட்டுபள்ளித் தெரு என்று சொல்லப்படும் (பலய தாலங்காடு ) பின்புறம் உள்ள வாய்க்காலை அகலப்படுத்தி ஆழப்படுத்தி சுமார் 10 மண் வெட்டி ஆட்களை வைத்து ஐந்து மணிநேரம் வேலை செய்தால் போதும் . தண்ணீர் நேரடியாக செய்னாங்குளம் சென்று விடும். இது உண்மை. இந்த வேலையை துணிவுடன் செய்யவும். இந்த தகவல் சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு. காரணம் பல ஆண்டுகளுக்கு முன்னாள் தெரு வசூல் மற்றும் துபாய் வசூல் செய்து ஒழுங்கான முறையில் சிறப்பாக கட்டி வைத்த பெருமை நம் தெருவை சேர்ந்த சிலருக்கு மட்டுமே பங்களிப்பு உண்டு ( பெயரை குறிப்பிட்டால் நீண்டுகொண்டுபோகும் ) அன்று நாங்கள் சிந்தித்து பிலால் நகரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் இன்னமும் கேள்விகுறியே ! ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரம் உள்ளவர்கள் எந்தவொரு பதவியும் இல்லாமல் நாங்கள் செய்த இந்த வேலையை தயங்காமல் செய்யவும் பிலால் நகரை காப்பாற்றிய புகழ் உங்களை சேரும். இந்த பதிவு போடுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு' என இவவாறு கூறப்பட்டுள்ளது.





No comments:
Post a Comment