இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள முகம்மதிய சட்டத்தை உருவாக்கியவர் மிகப்பெரிய சட்ட மேதையான சர். சையது சுல்தான் அஹ்மது அவர்கள்.
சையது சுல்தான் அஹ்மது இங்கிலாந்தில் பாரிஸ்டர் சட்டம் பயின்ற பின் பாட்னாவில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். இவருடன் மோதிலால்
நேரு, தேஜ் பகதூர் சாப்ரூ, சரத் சந்திரபோஸ் போன்றோர் பணிபுரிந்தனர். சட்டக் கல்வி மீதும், நூல் வாசிப்பிலும் ஆர்வமுள்ள இந்த மேதைக்கு அரசியல் பதவி தேடி வந்த போதும் அதை புறக்கணித்தார். 1923 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை பாட்னா பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்தார்.
அதுவரை எந்த இந்தியரையும் துணை வேந்தராக வெள்ளையர் அரசு நியமிக்கவில்லை. தன் ஆழ்ந்த சட்டப் புலமையால் வெள்ளை அதிகாரிகளுடன் இவர் பேசும் போது தெறிக்கும் கருத்துக்களால் கவரப்பட்டவர்கள் லண்டன் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராக இவரை பரிந்துரைத்தனர்.
41 முதல் 43 ஆம் ஆண்டு வரை அரசு ஆலோசகராக இருந்தவர்.
1931 இல் இலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் அரசே இவரை தேர்வு செய்து பிரதிநிதியாக அனுப்பியது. ஹைதராபாத் நிஜாம் அரசியல் பிரதமராக இவரை பொறுப்பேற்க வேண்டிய போது இவர் மறுத்து விட்டார். முஹம்மது அலி ஜின்னா தன் அமைச்சரவையில் கேபினட் உயர் பொறுப்பு தருவதாக அழைத்தார், அப்போதும் மறுத்து விட்டார். சுல்தான் அகமது பல் ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களுக்கான தனி சட்டத் தொகுப்பை மிக நுணுக்கமாக இயற்றி 1950 இல் நிறைவு செய்தார். இவரது தந்தையும் ஹைதராபாத் நிஜாமின் வழக்கறிஞராக இருந்தவர்.
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment