ஹரியானா மாநிலத்தில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி நூடுல்ஸ் பாக்கெட்டில் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டபோது தனது பதாஞ்சலி நிறுவனம் ஆட்டா நூடுல்ஸை அறிமுகப்படுத்தப் போவதாக பாபா ராம்தேவ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி அவர் அண்மையில் நூடுல்ஸ் பாக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் உணவு பாதுகாப்பு தர ஆணையயத்திடம் அனுமதி வாங்காமல் நூடுல்ஸை சந்தையில் விற்பனைக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டம் நர்வானா நகரைச் சேர்ந்த ஒருவர் மளிகை கடையில் ராம்தேவ் நிறுவன நூடுல்ஸை வாங்கிச் சென்றுள்ளார். பாக்கெட்டை பிரித்தபோது அதில் பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பதாஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். அந்த நூடுல்ஸ் பாக்கெட்டை தான் விற்பனை செய்ததை கடைக்காரரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment