தமிழ் மாநில காங்கிரசின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜிஆர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார் ஆகியோரின் பரிந்துரையின் படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களின் ஒப்புதலோடு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரசின் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் தமாகா அதிரை நகர புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தமாகா அதிரை நகரத் தலைவராக M.M.S அப்துல் கரீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை Y. மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர தலைவராக M.M.S அப்துல் கரீம், துணைத்தலைவர்களாக ஆர். ராமானுஜம், ஏ. கண்ணன், பொதுச்செயலாளர்களாக வி.வீரப்பன், ஜே. புஹாரி, வி. சகாதேவன், ஆர். சண்முகம், செயலாளர்களாக ஆர். நாகரத்தினம், சி.கிருஷ்ணன், ஏ. உசேன் முஹம்மது, பொருளாளராக M.M.S அப்துல் ஜலீல், இளைஞர் அணி தலைவராக டி. ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment