சென்னை: தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிலிருந்து ரூ.1 கோடி வரை ஒதுக்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து சீரமமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் வரையிலான பணிகளை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம் என நாடாளுமன்ற செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து ஒப்புதல் கடிதங்களை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைப்படும் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்குமாறு தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments:
Post a Comment