எகிப்தின் சைனாய் தீபகற்பத்தில் அண்மையில் மெட்ரோஜெட் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு பயங்கரவாத செயலே காரணம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ டிஎன்டி வெடிபொருளுக்கு இணையான சக்தி கொண்ட ஒரு வெடிகுண்டினாலேயே அந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு துறையின் தலைவர் அலெக்ஸாண்டர் பார்ட்னிகோவ் அதிபர் விளாடிமிர் புடினிடம் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அடங்கலாக விமானத்தில் பயணித்த 224 பேரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து தண்டிக்கப் போவதாக அதிபர் புடின் சூளுரைத்துள்ளார்.
சிரியாவில் ரஷ்யாவின் குண்டுத் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என்றும் அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment