Latest News

குரூப் 2ஏ தேர்வு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை (403), மருத்துவம், கிராம சுகாதாரப் பணிகள் (213), பதிவுத் துறை (59), வணிக வரித் துறை (191), சுகாதாரத் துறை (136), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), தலைமைச் செயலக நிதித் துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத் துறை (45), போக்குவரத்துத் துறை (35) உள்ளிட்ட துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பணியிடங்கள் என மொத்தம் 1,863 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை அக்டோபர் 12-இல் வெளியிட்டது.

இந்தத் தேர்வுக்கு இணையதளம்  (www.tnpsc.gov.in) வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று  மேலும், அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகள் மூலமாக உரிய விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திட கடைசி நாள் நவம்பர் 20 ஆம் தேதி ஆகும்.

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு c‌o‌n‌t​a​c‌t‌t‌n‌p‌s‌s​c​@‌g‌m​a‌i‌l.c‌o‌m​  என்ற மின்அஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது,

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.