அதிரை நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மேஸ்திரி அப்பா வீட்டு காலஞ்சென்ற அஹமது ஹாஜா அவர்களின் மகன் பைசல் அஹமது ( வயது 30 ) மலேசியாவில் பணியாற்றி விட்டு இன்னும் சில வாரங்களில் தனக்கு நடக்க இருந்த திருமணத்திற்காக ஊர் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாகனம் சேண்டாக்கோட்டைஅருகே வந்த போது சாலையின் பள்ளத்தில் சிக்கி வாகனம் கவிழ்ந்து அருகே உள்ள மரத்தில் பலமாக மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற பைசல் அகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடியவரை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மூலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா ஸ்டேஜில் இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு சுமார் ரூ 4 லட்சம் வரை செலவு ஆகும் என கூறியுள்ளனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தினரால் இவ்வளவு தொகை திரட்டுவதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது. இந்த நிலையில் உறவினர்கள், நண்பர்கள் மூலமாக அங்கு மிங்குமாக திரட்டப்பட்ட ரூ 1 லட்சத்தை மருத்துவமனையில் செலுத்தி உள்ளனர். மருத்துவ சிகிச்சை தொடர தேவைப்படும் மீதம் ரூ 3 லட்சத்தை திரட்டுவதில் இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தினர் நம்முடைய உதவியை நாடி வந்துள்ளனர். கோமா ஸ்டேஜில் உயிருக்கு போராடி வரும் இந்த ஏழை சகோதரனின் மருத்துவ சிகிச்சைக்காக நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் நற்கூலியை பெறுவோம்.
குறிப்பு : இவரின் குடும்பத்திற்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக உயிருக்கு போராடிவரும் பைசல் அஹமது அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது உடன்பிறந்த தம்பிக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூரில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
நிதி உதவி கோரி பைசல் அஹமது குடும்பத்தினர் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : NIJAR ALI A
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
SB A/C No. 20178026584
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
0091 9600323919 ( நிஜார் அலி )
0091 9597950833 ( யூசுப் )
பரிந்துரை: பேராசிரியர் செய்யது அஹ்மது கபீர்
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment