தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஒரு கன மழை தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையிலும், புறநகர்களிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் பேய் மழை பெய்து வருகிறது. அங்கு 10 மணி நேரத்தில் 19 செமீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதேபோல பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் கலெக்டர் எச்சரிக்கை இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் உஷாராக இருக்குமாறும், குறிப்பாக மணிமுத்தாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கலெக்டர் சுரேஷ் குமார் எச்சரித்துள்ளார். புதுச்சேரி - காரைக்கால் அதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும்,அதற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment