Latest News

மழை நிக்கற வரை சாம்பாரை நினைச்சுக் கூட பார்க்க முடியாது போலயே...!


மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ், கீரைக்கட்டு போன்றவற்றின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பருப்பு விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் காணப்படுவதால் சாம்பார் என்பது பகலில் காணும் கனவாக உள்ளது பலருக்கு. சரி பெயருக்கு பருப்பு போட்டு விட்டு, காய்கறிகளைப் போட்டு சாம்பார் வைக்கலாம் என்றால், அந்த ஆசையில் தண்ணீர் ஊற்றி விட்டது மழை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 

விலை உயர்வு... தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வரத்து குறைந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

தக்காளி... இதன் எதிரொலியாக தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதேபோல், கீரை வரத்தும் பெருமளவில் குறைந்துள்ளதால், அதன் விலையும் அதிகரித்துள்ளது.

வரத்து குறைந்தது... கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40-க்கும், முருங்கைக்காய் ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று மேலும் வரத்து குறைந்து, தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சாம்பார் வெங்காயம்... இதேபோல், சாம்பார் வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ரூ. 2க்கு விற்கப்பட்ட எலுமிச்சைப்பழத்தின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

கீரை... தொடர் மழை காரணமாக, கீரை கட்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றின் வரத்தும் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் அதன் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் வரை இதே நிலை தான் நீடிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

விலை நிலவரம்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் பின்வருமாறு: கத்தரிக்காய் - ரூ.15 முதல் ரூ.25 வரை, வெண்டைக்காய் - ரூ.20, முருங்கைக்காய் - ரூ.50, பீன்ஸ் - ரூ.30 முதல் ரூ.40 வரை, அவரைக்காய் - ரூ.35 முதல் ரூ.40 வரை, பீர்க்கங்காய் - ரூ.20, கேரட் - ரூ.35, பீட்ரூட் -ரூ.30, சவ்சவ் - ரூ.15, புடலங்காய் - ரூ.15, உருளைக்கிழங்கு - ரூ.18, சேனைக்கிழங்கு - ரூ.20, சேப்பங்கிழங்கு - ரூ.20, சுரைக்காய் - ரூ.10, இஞ்சி - ரூ.40, தக்காளி - ரூ.40 முதல் ரூ.50 வரை, நூக்கல் - ரூ.20, பாகற்காய் - ரூ.25, மிளகாய் - ரூ.15, சாம்பார் வெங்காயம் - ரூ.50, பல்லாரி - ரூ.40, முட்டைக்கோஸ் - ரூ.15, காலிபிளவர் - ரூ.30, கொத்தவரங்காய் - ரூ.20, கோவைக்காய் - ரூ.25, முள்ளங்கி - ரூ.20, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.20, வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.5, எலுமிச்சைப்பழம் - ரூ.3.

கீரை விலை... முளைக்கீரை - ரூ.10, அரைக்கீரை - ரூ.10, சிறுகீரை - ரூ.10, பொன்னாங்கண்ணி - ரூ.10, மனத்தக்காளி - ரூ.10, பசலைக்கீரை - ரூ.10, பாலாக்கு - ரூ.10, புளிச்சக்கீரை - ரூ.6 மற்றும் ரூ.7.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.