பிரான்ஸ் தலைநகரில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் கொடூரமாக தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 7 இடங்களில் தாக்குதல் நடத்தினர். கால்பந்து மைதானம், இசை கச்சேரி நடைபெற்ற அரங்கு என பொதுமக்கள் பெருமளவு கூடிய இடங்களில் நுழைந்து அவர்கள் தாக்குதல் நடத்தியதில் 160-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோரை பட்கிளான் இசை கச்சேரி அரங்கில் பிணைக் கைதிகளாக 4 தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர். இவர்களில் 3 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியாகினர். எஞ்சிய ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். பாரீஸ் தேசிய விளையாட்டு அரங்கம் அருகே மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனr. மற்றொருவன் கிழக்கு பாரீஸ் கொல்லப்பட்டுள்ளான். தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீவிரவாதிகள் எவரேனும் பதுங்கி உள்ளனரா என தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன
No comments:
Post a Comment