அதிரை - பட்டுக்கோட்டை பாயின்ட் டூ பாயின்ட் பேருந்து கவிழ்ந்து விபத்து !
அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கும் - பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கும் தினமும் பாயின்ட் டூ பாயின்ட் அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இந்த பேருந்துகளில் ஏராளமான அதிரை மற்றும் பட்டுக்கோட்டை ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் அதிரையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டையை நோக்கி விரைவு பேருந்து பயணமானது. பேருந்து கரிக்காடு அருகே சென்ற போது எதிரே தாறுமாறாக ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோத இருந்தது. நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. விபத்து குறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
நன்றி.அதிரைநியூஸ்
No comments:
Post a Comment