புதுடெல்லி இரண்டுக்கு மேல் குழந்தைகள் பெறும் இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வஹிந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் சதவீதம் குறைந்து இஸ்லாமியர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது குறித்து ஆர்.எஸ்.எஸ்.-ன் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசரில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனம் அனைவருக்கும் பொதுவான சட்டத்தை வழங்கியுள்ள நிலையில் 2 குழந்தைகள் என்ற கட்டுப்பாட்டை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும் என்று தொகாடியா வலியுறுத்தியுள்ளார்.
2 குழந்தைகளுக்கு மேல் இஸ்லாமியர்கள் பெறக் கூடாது என்பதை கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த கட்டுபாட்டை மீறுபவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து தண்டனை வழங்குவதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, ரேஷன் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தொகாடியா கேட்டுக் கொண்டுள்ளார்.
2 குழந்தை கட்டுப்பாட்டை கடைபிடிக்காவிட்டால் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்று அவர் கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினரை அப்புறபடுத்தவும் விரைவான நடவடிக்கை தேவை என பிரவீன் தொகாடியா அந்த கட்டுரையில் கேட்டுக் கொண்டார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment