தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரம் நீடிப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்தடை தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக அதிகளவில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், அதன் பின்னர் இரவிலும் என 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. 10 மணி நேர மின்தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்உற்பத்தி சரிந்ததால் மின்பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சமாளிக்கவே மின்லோடு செய்யப்படுவதாகவும் மின் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த மின்தடையால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதால் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அனைத்து தொழில்களுமே முடக்கம் அடைந்துள்ளன. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே மின்வெட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment