தாய் மது போதையில் நினைவிழந்து கிடந்ததால், பசியால் கதறிய இரண்டு வயது குழந்தைக்கு நாய் பாலூட்டிய சம்பவம் சிலியில் நடந்துள்ளது. ஆப்பிரிக்காவின் துறைமுக நாடு என்றழைக்கப்படுவது சிலி நாடாகும். இந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து சுமார் ஆயிரம் மைல் தொலைவில் உள்ள கிராமமொன்றில், மெக்கானிக் ஷெட் அருகில் நாய் ஒன்றிடம் இரண்டு வயது குழந்தைப் பால் குடித்துக் கொண்டிருப்பதை வழிப்போக்கர் ஒருவர் கண்டார். அதன் அருகிலேயே அக்குழந்தையின் தாயார் மது போதையில் கிடந்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் அக்குழந்தையை மீட்டு குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். போதிய போஷாக்கு இல்லாமல், மிகவும் சூம்பிப்போய் எலும்பும், தோலுமாக காணப்படும் அந்த குழந்தை, தோல் வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, போதை தெளிந்து எழுந்து தள்ளாடியபடியே வந்த அக்குழந்தையின் தாயை மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியடித்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment