ஜெயின் மதத்தினரின் உண்ணாவிரத திருவிழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வரிசையாக இறைச்சிக்கு தடைவிதித்து வருகின்றனர், இதனால் பல சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தானில் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை ரத்து என்ற அறிவிப்பு அங்கு சர்ச்சை கிளம்பியுள்ளது.
இறைச்சிக்கு தடை விதித்து சர்ச்சையான பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில், பாஜக மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் அமைப்பின் சிந்தனை வழிகாட்டியான தீன் தயாள் உபத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் இரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதே நாளில் தான் முஸ்லீம் விடுமுறை தினமான பக்ரீத் திருவிழா வருகிறது. ஆனால் இம்முறை அங்கு வசுந்தரா ராஜே அரசாங்கம் அந்த நாளில் விடுமுறை அறிவிக்க கூடது என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு முஸ்லீம்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை ரத்து நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டும் முஸ்லீம்கள் தீர்மானித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை முரணான மற்றும் மிகவும் பாசிச நடவடிக்கை என ஜனநாயக மத நல்லிணக்க மன்ற பொறியாளர் பேராசிரியர் சலீம் விமர்சித்துள்ளார். இது அரசாங்கத்தின் இந்து மதம் சர்ந்த நடவடிக்கை முயற்ச்சி என தெளிவாக தெரிகிறது எனவும் அவர் விமர்சித்தார்.
முஸ்லீம் ஆசிரியர்கள் அவர்கள் விரும்பினால் அந்த நாளில் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என அரசாங்கம் பின்வாங்கினலும், இது எழுத்துப்பூர்வமான அறிவிப்பு இல்லை என முஸ்லீம் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அரசு பள்ளிகளில் 'சூர்யா நமஸ்காரம்' யோகா ஆசனம் கட்டாயம் என்ற அறிவிப்புகள் விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் ராஜஸ்தான் கல்வி துறையின் இந்த அறிவிப்பு மேலும் சர்சையை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment