மத்தியப் பிரதேசத்தில், 5 வயது சிறுவனின் தலை ஒரு குக்கருக்குள் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தின், நரசிங்பூர் என்ற ஊரில் உள்ள, சாலிசுக்கா என்ற கிராமத்தில் 5 வயது சிறுவன் சமைக்கும் குக்கரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் தலை அந்த குக்கருக்குள் மாட்டிக் கொண்டது. சிறுவன் எவ்வளவு முயன்றும் தலையை வெளியே எடுக்க முடியவில்லை. பின், சிறுவனின் அழுகுரல் கேட்டு வந்து பார்த்தப் பிறகுதான் அவனது பெற்றோருக்கு இது தெரியவந்துள்ளது. அவர்களும் எவ்வளவு முயன்றும் குக்கருக்குள் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை வெளியே எடுக்க முடியவில்லை. பிறகு அந்த குக்கரை அறுத்து சிறுவனின் தலையை வெளியே எடுத்தனர்.
சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லஅச்சிறுவனின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அப்படி எடுத்துச் சென்றிருந்தால் சிறுவனின் தலையை சுலபமாக வெளியே எடுத்திருக்க முடியும் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர்.
No comments:
Post a Comment