தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், சட்டம்-ஒழுங்கை காப்பது குறித்து சீனியர் அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்திற்கு இன்று வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா, அங்கு சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கு அழைப்புவிடுத்தார். இக்கூட்டத்தில் சீனியர் அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தலைமை செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், உளவுப் பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாளின் திடீர் மரணத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களை தூண்டுவது யார், அதை கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment