Latest News

7 வயது சிறுமிகளிடம் பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 6 ஆயுள், 51 ஆண்டு சிறை.. அதிரடி தீர்ப்பு!


புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு அதி பயங்கரமான தீர்ப்பை அளித்து புதுவை கோர்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆசிரியர் செய்த செயல் அப்படி. புதுச்சேரி மேட்டுப்பளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். 30 வயதான இவர் செல்லிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2013 ம் ஆண்டு அந்தப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த மூன்று மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் முறையிட போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கல்வித்துறையும் விசாரணையில் இறங்கியது.

இறுதியில் அவர் மீதான புகார் உண்மை எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார். போலீஸார் ஆசிரியர் மீது கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர். புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் ரவீந்திரகுமாருக்கு 6 ஆயுள் தண்டனையும், 3 பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 3 ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. அத்தோடு அவருக்கு ரூ. 90,000 அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் அதிரடியாக தீர்ப்பளித்தார். இதையடுத்து கார்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மிகப் பெரிய தண்டனை விதித்து தீர்ப்பளித்தது கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.