2050ம் ஆண்டுக்குள், உலகின் மூன்றாவது பெரிய மதப்பிரிவாக இந்துக்கள் இருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதேநேரம், முஸ்லிம்களின் வளர்ச்சிவிகிதம், உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைவிடவும் அதிகமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ப்யூ ஆய்வு மையம் 'உலக மதங்களின் எதிர்காலம்; மக்கள் தொகை பெருக்கம், 2010-2015' என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்துக்கள் எண்ணிக்கை
இந்த ஆய்வில் வெளியாகியுள்ள சுவாரசிய தகவல்கள்: உலக இந்து மக்கள் தொகை தற்போது 100 கோடியைவிட சற்று அதிகமாக உள்ளது. இது 2015ல் 140 கோடி அளவுக்கு உயரும். இது 34 சதவீத வளர்ச்சியாகும்.
இஸ்லாமிய பெரும்பான்மை நாடாகும் இந்தியா
2050ல், உலகத்திலேயே அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா மாறும். 2010ல் இந்தியாவில் இந்துக்கள் 80 சதவீதம் இருந்த நிலையில், அது, 2050ல் உள்ள மொத்த மக்கள்தொகையில், 77 சதவீதமாக குறையும்.
அமெரிக்காவில் இந்துக்கள்
இந்துக்களின் மக்கள்தொகை இந்தியாவில் 17 சதவீதமாக அதிகரிக்கும். அதேநேரம், வெளிநாடுகளை பொறுத்தளவில், அமெரிக்காவில் 4.5 சதவீதமாக இந்துக்கள் வளர்ச்சி இருக்கும். இந்தியா தவிர்த்த ஒரு நாட்டில் பெருகப்போகும் இந்துக்கள் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு முதலிடம் கிடைக்கப்போகிறது.
முஸ்லிம்கள் வளர்ச்சி மிகவும் அதிகமாகும்
2050ல், உலக மக்கள்தொகை, 35 சதவீத வளர்ச்சியடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம், முஸ்லிம்கள் மக்கள்தொகை 73 சதவீதம் வளரும். மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைவிட, முஸ்லிம்கள் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கப்போகிறது.
கிறிஸ்தவர்களும் அதிகரிப்பார்கள்
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையும் 35 சதவீத வளர்ச்சியையொட்டி இருக்கும். 3வது இடத்தில் 34 சதவீத வளர்ச்சியுடன் இந்துக்கள் இருப்பார்கள் என்கிறது அந்த ஆய்வு.
பின்னோக்கி போகும் புத்தமதம்
சிறிய மதமான, யூத மதமும், இக்காலகட்டத்தில் 16 சதவீத வளர்ச்சி பெறும். அதேநேரம், புத்தமதம், மைனஸ் பூஜ்யம் புள்ளி 3 என்ற விகிதத்தில் குறையுமாம்.
No comments:
Post a Comment