அரபு வளைகுடா நாடான பத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைவாசிகள் அவர்களது குடும்பத்தினருடன் ஒரு நாளோ அல்லது சில மணி நேரங்களோ சந்தோஷமாக கழிக்க இரண்டு பங்களாக்களை அந்த நாட்டு சிறைத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
வீட்டில் இருப்பதைப் போன்றே தங்கும் அறைகள்,சமையலறை மற்றும் உறவினர்கள் நண்பர்களை சந்தித்து பேசும் வகையில் வரவேற்புக் கூடம் போன்றவை அமைக்கப் பட்டிருக்கிறது.
கைதிகளுக்கு உளவியல் ரீதியாக மாற்றங்களையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் கத்தார் அரசு இந்த ஏற்பாடுகளை செய்திருப்பதாக அந்நாட்டின் ‘அல்ராயா’ எனும் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி வளைகுடா நாட்டின் பிரபல ஆங்கில நாளேடான கல்ஃப் நியூஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment