அதிரை ஜும்மா பள்ளி பின்புறம் மேலத்தெருவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், திருமண நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மைதானம் செடிகளால் மண்டிக்காணப்படுவது அப்பகுதியில் வசிக்கும் விளையாட்டு ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மைதானத்தில் பல்வேறு கால கட்டங்களில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்து காட்டி இருக்கின்றனர் என்றும், தற்போது இந்த மைதானம் பொலிவிழந்து காட்சியளிப்பது அனைவரையும் குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்து கடந்த [ 17-12-2014 ] அன்று 'பொலிவிழந்து காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானம் !' என்ற தலைப்பில் அதிரை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அமீரக TIYA நிர்வாகத்தினர் மைதானத்தை தூய்மை செய்து கொடுப்பதாக அப்போது உறுதி அளித்து இருந்தனர். இது குறித்து அமீரக TIYA தலைவர் அப்துல் மாலிக் சார்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் TIYA நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மைதானம் சீரமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானத்தை அமீரக TIYA தலைவர் முஹம்மது மாலிக், M.M.S அப்துல் கரீம், V.T. அஜ்மல்கான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment