Latest News

3.56 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து


தமிழகத்தில் 3.56 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

மாவட்ட வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3 லட்சத்து 56 ஆயிரத்து 738 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாள்களுக்குள் அட்டைகள் வழங்கப்படும்.

குறைதீர் முகாம்கள்: பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கு, உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில், 3 லட்சத்து 42 ஆயிரத்து 482 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 629 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள 15 ஆயிரத்து 853 மனுக்கள் தீவிர ஆய்வுக்குப் பிறகு தீர்வு செய்யப்பட்டுள்ளன.

நுகர்வோர் வாங்கும் பொருள்களின் தரம் தொடர்பான குறைபாடுகள் குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தீர்வு காண, மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணிலும், ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், மூன்று செல்லிடப்பேசிகளில் (72999 98002, 86800 18002, 86800 28003) குறுஞ்செய்திகளும் அனுப்பலாம்.

அத்தியாவசியப் பொருள்களைக் கடத்துவோர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 22 ஆயிரத்து 881 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 661 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இந்தக் கூட்டத்தில், உணவுத் துறைச் செயலாளர் முகம்மது நசிமுத்தின், ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.