காதலர் தின கொண்டாட்டத்தின் போது இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.
25 வயது இளம்பெண்ணை அவரது நண்பர் காதலர் தினம் கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று பெண்ணும் அங்கு சென்றுள்ளார். வாலிபரது வீட்டில் ஏற்கனவே அவரது இரண்டு ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர்.
கொண்டாட்டத்தின்போது இளம்பெண்ணுக்கு வாலிபர்கள் மயக்க மருத்து கலந்து குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். இதனையடுத்து மயங்கிய இளம்பெண்ணை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பெண்ணுக்கு நினைவு திரும்பியதும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்தை உணர்ந்துள்ளார். பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பி வெளியே வந்து காவல்துறையினர் புகார் அளித்தார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணின் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்
No comments:
Post a Comment