ஏர் இந்தியா நிறுவனஅலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் மேற்கு வங்க மாநில அதிரடிப்படை போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சனிக்கிழமை தொலைபேசி மூலம் விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தார். அந்த தொலைபேசி எண் இருக்கும் பகுதியை போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர்.
அதையடுத்து, வடக்கு 24 பர்காணா மாவட்டம் பாங்கோன் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தா பிஸ்வாஸ் என்ற கொல்கத்தா போலீஸின் அதிரடிப்படை பிரிவினர் கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment