இளம்பெண்ணை ரகசிய திருமணம் செய்துவிட்டு, பெண் போலிஸ்சுடன் காதல் லீலையில் ஈடுபட்டு வரும் பொலிஸ்காரர் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, நேற்று பிற்பகலில் கண்ணீர் விட்டு அழுதபடி இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அவர் கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் தனது சோகக்கதையை கூறியுள்ளார். அவரது பெயர் காவ்யா(23). சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்தார்.
கடந்த ஆண்டு யூன் மாதம் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவரை, காதலித்து ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டார். இருவரும் 15 நாட்கள் மட்டும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.
அதன்பிறகு அவரை காதலித்து மணந்த போலீஸ்காரர் அவருடன் வாழாமல் அவரை தவிக்க விட்டு சென்று விட்டார்.
அந்த போலீஸ்காரர் பெண் பொலிஸ் ஒருவரையும் காதலித்துள்ளார். சென்னை பரங்கிமலையில் ஒரு வீட்டில் தனது கணவரையும், பெண் பொலிசையும் காவ்யா கையும், களவுமாக பிடித்து விட்டார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, தனது பொலிஸ்கார கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி இளம்பெண் காவ்யா தொடர்ந்து ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பரங்கிமலை துணை கமிஷனர் விசாரித்து கடுமையாக எச்சரித்து, பொலிஸ்காரரை காவ்யாவோடு சேர்ந்து வாழ வைத்துள்ளார்.
அதை ஏற்று 4 நாட்கள் மட்டும் வாழ்ந்த அவர், காவ்யாவை அடித்து உதைத்து விட்டு மீண்டும் பெண் பொலிசுடன் சென்று விட்டார்.
இதனால் சென்னை கமிஷனரை நேரடியாக சந்தித்து முறையிட்டால்தான் தனக்கு நியாயம் கிடைக்கும் என்றும் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment