அரசு உயர் நிலைப் பள்ளிகளையும், மேல் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையையும் சேர்த்து கூட்டினால் கூட தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மது பான கடைகளின் எண்ணிக்கையை தாண்ட முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைகளையும், டாஸ்மாக் மதுபான கடை எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்-அப் குரூப்புகளிலும் பரவி வருகிறது.
அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதைவிட அது சொல்ல வரும் கருத்து ஆணித்தரமாக உள்ளது. அந்த செய்தி இதுதான்:
தமிழ்நாட்டில் மொத்தம் 2739 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. 2851 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கை 6823 உள்ளன. அதாவது, உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை கூட்டினால்கூட, டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கையை எட்ட முடியவில்லை என்கிறது அந்த செய்தி.
ஓ.கே. இந்த தகவல்களை பார்த்துவிட்டு, மாணவர்கள் இப்போ கேட்கும் கேள்வி என்ன தெரியுமா... நாங்க படிக்கவா? இல்ல குடிக்கவா?
No comments:
Post a Comment