ஸ்கைப்புக்கு போட்டியாக துவக்கப்பட்ட வைபர், தகவல் பரிமாற்றம் மற்றும் பேசுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்டெர்நெட் மூலம் மற்றொரு வைபர் உறுப்பினருக்கு இலவசமாக பேசவும், தகவல்கள் அனுப்பவும் முடியும். இந்த சேவை துவக்கத்தில் ஐபோனுக்கு மட்டும் வழங்கப்பட்டது. பின்னர், ஆன்டிராய்டு, விண்டோஸ் போன்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.தற்போது இந்தியாவில் 3.3 கோடி பேர் வைபர் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. இங்கு 3 கோடி பேர் வைபர் பயன்படுத்துகின்றனர். இதை தொடர்ந்து ரஷ்யா (2.8 கோடி பேர்), பிரேசில் (1.8 கோடி பேர்), லண்டன் (50 லட்சம் பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள வைபர் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 46 கோடி.
பயன்பாட்டாளர் எண்ணிக்கையில் மட்டுமின்றி, வருவாய் பெற்றுத்தருவதிலும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது. வைபர் ஸ்டிக்கர்களை அனுப்புவோர் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகம். வாட்ஸ் அப், பேஸ்புக், ஸ்கைப் போன்று பிரபலப்படுத்தும் வகையில், லைன், ஹைக் போன்ற மெசஞ்சர் அப்களை போல வைபரும் தனது சேவை பற்றி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்ய தொடங்கியது. பேஸ்புக் பயன்படுத்துவதிலும் இந்தியா 10 கோடி வாடிக்கையாளர்களுடன் உலக அளவில் 2ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment