சிகரெட் பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சகம் நிபுணர்குழு ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்த வரைவு குறிப்பு ஒன்றை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பெட்டி கடைகளில், சிகரெட்டை சில்லரையாக விற்பதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட புகையிலை தொடர்பான கடுமையான கொள்கைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மோடியின் முந்தைய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் இ-சிகரெட் மற்றும் மின்னணு நிகோடினுடைய அனைத்து பொருட்களுக்கும் தடை விதித்தார். இந்த வகையான நிகோடின் கலந்த பொருட்கள் குழந்தைகளிடையே புகையிலை பழக்கத்தை தூண்டும்படியாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், சிகரெட்டின் விலை மீதான வரியை உயர்த்தியதன் மூலமே புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். மேலும் புகைப்பிடிப்பதற்கான வயது தளர்வை 18லிருந்து 25 வயதாக உயர்த்துவதன் மூலமும் தடுக்க முடியும். பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு அரசும் பல விதமான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் விதித்து வருகிறது. மேலும் பள்ளி வளாகங்களில் சிகரெட் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment