அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் -இளைஞர் சங்கம் - அமீரக இளைஞர் சங்கம் ஆகியோர் இணைந்து குர்பானி தோல் வசூலில் இன்று ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குர்பானித்தோல்களை மஹல்லாவாசிகளிடமிருந்து சேகரித்தனர். இதில் கிடைக்கக்கூடிய வருவாயை வழக்கம் போல் ஏழை எளியோரின் வாழ்வாதாரம் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகளில் அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க இந்நாள் - முன்னாள் நிர்வாகிகள் அனைவரும் ஈடுபட்டனர்.
முன்னதாக அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் சார்பில் பெரிய ஜும்மா பள்ளியில் இன்று காலை நடைபெற்ற பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டோருக்கு குளிர்பானம் வழங்கினார்கள்.
Thanks : ADIRAI NEWS
Thanks : ADIRAI NEWS
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment