தனியார் வங்கி ஏ.டி.எம். மையங் களில் பணம் நிரப்புவதில் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப் பட்ட குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படை யில், நகைச்சுவை நடிகர் பாலாஜி திருப்பூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
திருப்பூரில் உள்ள ஐ.சி.ஐ. சி.ஐ., பாங்க் ஆப் மகாராஷ்டிரா, எச்.டி.எப்.சி. உள்ளிட்ட வங்கி களின் ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை `செக்யூரிட்டி ரெயின்ஸ் இந்தியா பிரைவேட் லிட்.’ ஊழியர்கள் செய்து வந்தனர்.
தனியார் நிறுவன ஊழியரான சுரேஷ்குமார் (33), ஏ.டி.எம். இயந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணி செய்துவரும் அங்கேரிபாளையம் வெங்க மேடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு வியாஷ் (26), அவிநாசி குளத்துப் பாளையத்தைச் சேர்ந்த பரமசிவம் (29), பிச்சம்பாளையம் புதூரைச் சேர்ந்த பிரபு (26), ராஜசேகர், மணிகண்டன் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் பணத்தை நிரப்பும்போது சிறிது சிறிதாக பணத்தைக் குறைத்து வைத்து ரூ.2 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 200-ஐ கணக்கில் காட்டாமல் நூதன முறையில் மோசடி செய்ததாக தனியார் நிறுவனத்தின் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நிறுவன மேலாளர் பரதன் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் சுரேஷ்குமார், விஷ்ணு வியாஷ், பரமசிவம், பிரபு ஆகிய 4 பேரை கடந்த ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த லோடிங்மேன் ராஜசேகர் (26), மணிகண்டன் (28) ஆகிய இருவரையும் ஏப். 30-ல் கைது செய்தனர். இவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், மோசடி செய்த பணத்தில் 10 லட்சம் ரூபாயை ‘ஸ்டார் நைட்’ நிகழ்ச்சி நடத்த நடிகர் பாலாஜிக்கு முன்பண மாகக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நடிகர் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராமசந்திரன் முன்னிலை யில் சனிக்கிழமை சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.
No comments:
Post a Comment