ஸ்பெயின் விமான நிலையத்தில் மோதிக்கொள்ள இருந்த இரண்டு விமானங்கள் நொடிப்பொழுதில் தப்பித்துள்ளன.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோன விமான நிலையத்தில் இருந்து அர்ஜென்டினா ஏர்பஸ் A340 என்ற விமானம் புறப்படுவதற்கு தயாராக மெதுவாக மேலேறி சென்று கொண்டிருந்தது.
அப்போது ரஷ்ய விமானமான போயிங் 767 என்ற விமானம் தரையிறங்க வந்துள்ளது. ஒரு விமானம் புறப்பட மற்றொரு விமானம் தரையிறங்கி கொண்டிருக்கையில் இரண்டும் ஒரு கட்டத்தில் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டன.
பின்னர் தரையிறங்க வந்த ரஷ்ய விமானத்தின் ஒட்டுநர், முயற்சி செய்து தன்னுடைய விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விபத்தை தடுத்துள்ளார்
No comments:
Post a Comment