Latest News

  

எளிதாக பேஸ்புக் வீடியோ ‘டவுன்லோட்’ செய்வது எப்படி ? தெரிந்துகொள்ளுங்கள்

பேஸ்புக்தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை நம்மால் பார்பதற்கு மட்டுமே முடிவதுடன் அதனை இலகுவாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி பேஸ்புக் தளத்தில் வழங்கப்படவில்லை.
இருந்தாலும் பேஸ்புக் தளத்தில் மாத்திரமின்றி இணையத்தில் எந்த ஒரு இடத்திலும் இருக்கக் கூடிய வீடியோ கோப்பு ஒன்றினையும் பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.
இதற்கு பின்வரும் வழிமுறைய பின்பற்றுக.

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம்.

1 (1)

பின் அதனை keepvid எனும் தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Past செய்க.

பின் Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும்.


2

இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும்.
3
பிறகு அதனை Right Click செய்து Save Video என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உங்கள் கணனியில் தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.